யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயிலுக்குள் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்!

Share

பு.கஜிந்தன்

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

13-01-2025 மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 29 வயதான, திருமணமாகி இரண்டு மாதங்களான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>