யாழ்ப்பாணத்தில் ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!

Share

வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்ட களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.

வட மாகாண கல்வி திணைக்களத்தின் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கல் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>