யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் தென் இலங்கையில் இருந்து சுற்றுலா சென்ற குடும்பப் பெண் உயிரிழப்பு!

Share

தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் சென்றவர்களின் கார் மீது பட்டா ரக வாகன மோதியதில் பெண்ணொருவர் 10ம் திகதி திங்கட்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே குசும்புஸ்பராணி (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுற்றுலாவிற்காக கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளனர். இதன் போது தெல்லிப்பழை சந்திக்கும் பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பட்டாராக வாகனமும் குறித்த காரும் மோதி விபத்து சம்பவித்தது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>