யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் 23ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 3-4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் வெளிவந்தது. பின்னர் வலந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 23ம் திகதி அன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>