யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சொகுசு பேருந்து வழியில் தீக்கிரை

Share

(25-08-2023)

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து நீர்கொழும்பில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

புதன்கிழமை (23) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

இதற்கமைய நேற்று (24-08-2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டது டன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>