யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம் – உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!

Share

திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணிற்கு திருமணமான நிலையில் அவரது கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார். குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதன்போது அவர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>