யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்ட துயரச் சம்பவம்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த முத்தன் பிரேம் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் 23ஆம் திகதி தனது வீட்டில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார். பின்னர் உறவினர்கள் சடலத்தை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சடலம் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>