யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 09 ம் திகதி நடைபெற உள்ள ஹரிகரன் இசை நிகழ்வு

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(7-02-2024)

யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று மதியம் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிர பலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>