யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக 5 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு நேற்றையதினம் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் 22ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று மாலை குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>