யாழ்ப்பாணத்தில் சகோதரனின் வீட்டில் கூரை வேலை செய்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழில் சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த சிவநாயகம் சுவீஸ் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 3ஆம் திகதி சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்வதற்கு சென்றுள்ளார். அங்கு கூரை வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவேளை கூரை மரம் முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 8ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>