யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அஞ்சல் வாக்கெடுப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் (24.04.2025) ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளதுடன் 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினமும் (25.04.2025) அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக 28.04.2025 மற்றும் 29.04.2025 ஆகிய திகதிகளிலும் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>