யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துக்கு கல் வீசிய பெண் கைது!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று யாழ்ப்பாண நகர் பகுதியில் தரித்து நின்றுள்ளது.

இதன்போது அங்கு நின்ற பெண்ணொருவர் பேருந்து மீது கல் வீசி தாக்கி பேருந்தை சேதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>