யாழ்ப்பாணத்தில் தாக்குதல் ஒன்றுக்கு தயாராக இருந்த கும்பலை அதிரடியாக கைது செய்த சுன்னாகம் பொலிஸார்!

Share

யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்கு தயாராக இருந்த கும்பலை அதிரடியாக கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அந்த கயவர்களை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் 16ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாரிகினர். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தவகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை தடுக்கும் வகையில் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>