யாழ்ப்பாணத்தில் திருமணமாகி நான்கு மாதங்களேயான இளம் குடும்பப் பெண் மரணம்!

Share

திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நேற்றையதினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன்பின்னர் அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>