யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

Share

பு.கஜிந்தன்

17-10 – 2024 அன்றையதினம் யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது வவுனியா – நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மேசாத் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த வீட்டில் தங்கி இருந்து மேசன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மனவிரக்தியில் இருந்த அவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>