யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்புடன் கைதான பெண்!

Share

சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் 28ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>