யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Share

வடபகுதி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் பலர் மரணத்தைத் தழுவுவோர் தொகை அதிகரிக்கின்றதா?

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.ஸமூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு பித்தப்பை கல் சந்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த 22ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் 23ஆம் திகதி பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் சிலமணி நேரங்களில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் 25ஆம் திகதி காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் வடபகுதி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் பலர் மரணத்தைத் தழுவுவோர் தொகை அதிகரிக்கின்றதா? என்ற கேள்வி எழுவது தவிர்க்கப்பட முடியாததா என்று பலரும் கேட்கின்றார்கள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>