யாழ்ப்பாணத்தில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் நித்திரை கொண்ட வடக்கு கல்வி அதிகாரிகள்!

Share

யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ஹரிணி அமர சூரிய வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரக்கூடிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>