யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று மே மாதம் 29ம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 11.02.2025 பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வயிற்றில் கட்டி என்ற காரணத்தால் 07.05.2025 அன்று வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 3 தடவைகள் குழந்தைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 29ம் திகதி அன்றையதினம் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கிருமித்தொற்று ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>