பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் மோதி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று (05.08.2023) கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த திலீபன் பிரியா (வயது 27) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த பெண் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
எனினும், பெண்ணின் சடலத்தை யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>