யாழ்ப்பாணத்தில் புற்றுநோயின் தாக்கம் தாங்க முடியாத முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Share

13ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம், யாழ்ப்பாணத்தில் புற்றுநோயின் வேதனை தாங்கமுடியாமல் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைச் சேர்ந்த கனகரத்தினம் லோகநாதன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் அவஸ்தைபட்டுள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் நேற்றையதினம் காலை தவறான முடிவெடுத்து மண்ணெண்ணெய் அருந்தியுள்ளார்.

பின்னர் உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>