யாழ்ப்பாணத்தில் மாரடைப்பினால் திடீரென உயிரிழந்த ஆண்மகன் !

Share

பு.கஜிந்தன்

29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (திருமணமாகவில்லை)

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் புதன்கிழமை அன்றிரவு உறக்கத்துக்கு சென்றுள்ளார். அவர் சங்கானை சந்தையில் வியாபாரம் செய்கின்றவர் என்பதால் அவரை வியாபாரத்துக்கு அனுப்புவதற்கு உறவினர்கள் வியாழன் அ ன்று காலை எழுப்ப முற்பட்டவேளை அசைவற்று காணப்பட்டார்.

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>