யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதி ஆண் ஒருவர் மரணம்!

Share

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் நபர் ஒருவர் 26ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது வைத்தியசாலை வீதி பகுதியைச் சேர்ந்த அன்ரனி தேவதாஸ் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அவர்மீது முச்சக்கர வண்டி மோதியது. பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் 25ஆம் திகதி அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆகையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>