யாழ்ப்பாணத்தில் மைதானமொன்றில் உதைபந்தாட்ட கம்பம் விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

Share

நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இச்சம்பவம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>