யாழ்ப்பாணத்தில் வர்த்தகப் பிரிவில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு கௌரவிப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் வர்த்தக பிரிவில் 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது 17-10-2024 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சமூகநலன் சார்ந்து செயல்படும் அமைப்பான விடியல் அமைப்பினால் இந்த கௌரவிப்பு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள ஏனைய மாணவர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து வெற்றி கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பேராசிரியர் திரு.ரொபின்ஸன் கலந்துகொண்டதுடன், ஆசிரியர்களான எஸ்.பிரதீபன், ஆர்.தர்சன், திரு.திருக்குமாரன் ஆகியோரும், வழக்கறிஞர்களான செல்வி. சுரேக்கா, செல்வி. உஷாந்தினி ஆகியோரும், விடியல் அமைப்பினரும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>