யாழ்ப்பாணத்தில் வாகன விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் 20ம் திகதி வியாழக்கிழமை அன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி செம்மணி வீதியூடாக பயணித்துக்கொண்டு இருந்தார். இதன்போது அவ்வீதியால் வந்த அரச பேருந்து அவரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவர்மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>