யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பஸ் சாரதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share

வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன்(வயது 53)என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இ.போ.சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் 7ம் திகதி வெள்ளிக்கிழமை காலை சாலைக்கு வேலைக்குச் சென்றபோது தலைச்சுற்று ஏற்பட்டதன் காரணமாக வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மாலை அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் 8ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் . திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>