யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் 15ம் திகதி புதன்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த பதின்மூன்றாம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் 15ம் திகதி புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளார். இந்நிலையில் அவரை அதிகாலை நான்கரை மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

குடல்வளரி ஏற்பட்டதால் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால் வாந்தி எடுத்தவேளை சுவாசக் குழாயினுள் வாந்தி சென்ற காரணத்தால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>