யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

24ம் திகதி புதன்கிழமை அ ன்றையதினம் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் இன்று காலை ஆடைகளை மின்சார சாதனம் மூலம் அழுத்திக் கொண்டிருந்த நிலையில் மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் அவர் மீது தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டாடர். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>