யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வீதியில் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள வலிகாமம் .மேற்கு பிரதேச சபை!

Share

பு.கஜிந்தன்

கல்லூண்டாய் வீதியில் விபத்துக்கள், இரவில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

குறித்த வீதியில் வீதிவிளக்குகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முயற்சியால் மாகாண அபிவிருத்தி நிதியில் இருந்து 9.3 மில்லியன் ரூபாவும் மற்றும் சபை நிதியில் இருந்து 0.428 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு, கல்லுண்டாய் வீதியில் மின்சார சபையினால் புதிதாக மின்கம்பங்கள் நாட்டப்பட்டு மின் குமிழ்கள் பொருத்தும் பணிகள் நேற்று இடம்பெற்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>