யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை இடையை சேவையில் ஈடுபடவுள்ள கப்பலின் சோதனை ஓட்டம்

Share

பு.கஜிந்தன்

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் இன்று (08.10.2023) இடம்பெற்ற நிலையில், இன்று மதியம் 1.45 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்தது. இவ்வாறு வந்தடைந்த கப்பல் 10ஆம் திகதி பயணிகளை ஏற்றியவாறு இந்தியா – நாகபட்டினம் நோக்கி பயணிக்கவுள்ளது.

கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>