கடந்த 9 ம் தி கதி ஞாயிற்றுக்கிழமை அன்று சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு குழுவினருக்கு இடையே அன்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. இந்நிலையில் ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கர வண்டி சாரதியுமென ஐவர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>