யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தெருநாய்களை பிடித்து வளர்க்கும் ‘இரக்கமுள்ள’ குடும்பம் ஒன்று

Share

குறித்த குடும்பத் தலைவர் நாடளாவிய ரீதியில் நடைபயணம் மேற்கொண்டு நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்ற ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவிப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரத்தில் அநாதரவாக நிற்கின்ற நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றினை வளர்த்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர்.

அயல் வீட்டில் உள்ள ஒருவர் அவர்கள் வளர்க்கின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களது நாய்கள் காணாமல் போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர்.

குறித்த குடும்பத் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அற்புதமான குடும்பத்தையும் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோரை பல குடாநாட்டு மக்கள் பாராட்டியுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>