யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

Share

பு.கஜிந்தன்

18ம் திகதி செவ்வாய்கிழமை அன்றையதினம் காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றையவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக, தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>