யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் இறுதிச் சுற்றும் தேசிய ரீதியாக சாதித்த யுவதிக்கான கௌரவிப்பும்!

Share

விக்டோரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற T20 Bash மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை 23ம் திகதி அன்றையதினம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விக்டோரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமான ச.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக விக்டோரியா கல்லூரியின் முன்னைநாள் அதிபர் வ.சிறீகாந்தன் கலந்து சிறப்பித்தார்.

27 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு union மற்றும் centralites ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. இரு அணிகளும் அன்றையதினம் மோதிய நிலையில் union அணியானது 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அத்துடன் centralites அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.

குறித்த நிகழ்வின்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன் மற்றும் தேசியமட்ட வேகநடை போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாவது இடம் பெற்ற தமிழரசி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>