யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலியுடன் தமிழ் பொதுவேட்பாளரின் பரப்புரைப் பயணம் ஆரம்பம்

Share

பு.கஜிந்தன்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை அறிமுகம் செய்து ஆதரித்து நடைபெறவுள்ள முதலாவது பொதுக் கூட்டம் 18-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை செந்தமிழ் விளையாட் டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு பா.அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் அன்று காலை அஞ்சலி செலுத்தித் தனது பரப்புரைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

பொலிகண்டி முதல் பொத்துவில் வரைக்கும் என்று பெயரிடப்பட்டுள்ள இப் பிரச்சாரப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாகவே தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட் டுள்ளது. தொடர்ந்து பா.அரியநேத்திரன் ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , மதத் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றார்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன், தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகள் பேராசிரியர் கே . ரி . கணேசலிங்கம், த.வசந்தராஜா,அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>