யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுக்கப்பட்ட அழைப்பு

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கையப்பத்துடன் அழைப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டும் விசாரணைக்கு வருகை தராத யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மூன்றாவது தடவை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, முறைப்பாட்டாளர், தன்னை தலைமை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்தியதாக யாழ்ப்மாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் மூன்றாவது அழைப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கையொப்பத்துடன் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்புக் கடிதத்தில் “மனித உரிமைக் ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தின் முறைப்பாடானது விசாரணை செய்யப்படவேண்டியுள்ளது. 2023.08.17 திகதி முய. 11.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு – யாழ்ப்பாண குரியாலயத்திற்கு (இல013ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்) சகல பொருத்தமான ஆணங்களுடன் ஆணைக்குழு முன்னிலையில் சமூகமளிக்க வேண்டுமென்பது அறிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவின் முன்நிலையில் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் அது ஆணைக்குழுவினை
அவமதிக்கு அல்லது அகெளரப்படுத்தியதாகக் கருதப்படும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கையொப்பத்தின் கீழ் வழங்கப்படுகின்றது என குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>