யாழ்ப்பாணம் தீவக பாடசாலையில் மாணவியை தாக்கிய அதிபர் கைது!

Share

யாழ்ப்பாணம். தீவக வலயத்திற்கு உட்பட்ட, மண்கும்பானில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மாணவியை தாக்கிய அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>