யாழ்ப்பாணம் தீவக வெண்புறவி குடியேற்றத் திட்டத்தில் பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் தீவக வெண்புறவி குடியேற்றத் திட்டத்தில் பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது!

அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 25 வயதான சந்தேகநபரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் யாழ்ப்பாணம் போதனாவில் அதிகளவு மாத்திரைகளை உள்ளெடுத்து அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உளவள சிகிச்சையின் பொழுது அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டார்.

தான் உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கிய நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை மூலம் ஊர்காவற்றை பொலிசாருக்கு தகவல் வழங்கபட்ட நிலையில் ஊர்காவற்றை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர் .

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினை சட்ட வைத்திய அதிகாரி முன் நேற்று முன்தினம் பொலிசார் முற்படுத்தினர்.

குறித்த சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாலியல் தொந்தரவை மேற்கொண்ட சந்தேகநபரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இன்னொரு சிறுமியும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>