யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1000 க்கு மேற்பட்ட சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோம் என்கிறார் வைத்திய கலாநிதி கோபி சங்கர்

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2014 முதல் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் 1000 க்கு மேற்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளும் , 2000 வரையிலான நடுத்தர மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் மேற்கொண்டதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் என்பும் முறிவு சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பணி இடமாற்றம் பெற்று செல்லும் வைத்திய கலாநிதி கோபி சங்கர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருடத்திற்கு 4000 வரையிலான புது நோயாளர்களையும் 1300க்கு மேற்பட்ட பழைய நோயாளகளிற்குமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

வளைபாதத்திற்கான சிறப்பு கிளினிக் மற்றும் வடமாகாணத்திற்கான வளைபாத சிகிச்சைக்கான பயிற்சிப் பட்டறைகளை வடமாகாண விளையாட்டு மருத்துத்துறையின் ஒருங்கிணைப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் விளையாட்டு மருத்துவ அலகின் பொறுப்பு வைத்திய நிபுணராகவும் செயற்பட்டேன்.

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரும், ஜெய்ப்பூர் நோயாளிகளிற்கான வழிகாட்டலும் சிகிச்சை வழங்கியதோடு வடமாகாண வீதிப் பாதுகாப்பு சபைத் தலைவர் , அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

2014 முதல் 2021 வரை ( நிரந்தர வைத்தியர் கடமையேற்கும் வரை) முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மாதாந்த என்பு முறிவு சத்திரசிகிச்சை கிளினிக் மூலம் வருடந்தோறும் 4000 மேற்பட்ட நோயாளிகளுக்கான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

மேலும் இரத்ததான முகாங்கள் ஒழுங்கமைப்பு விளையாட்டு வீரர்கள், போதனாசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு, பயிற்சி, உபாதைகளை தடுத்தல், சத்துணவு , முதலுதவி சம்மந்தமான கருத்தரங்குகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தேசிய , சர்வதேச அளவிலான என்பியல் கருத்தரங்குகள், சத்திரசிகிச்சை பயிற்றுவிப்புக்கள், மற்றும் கல்வியூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு போதனா வைத்தியசாலையின் புனருத்தாபண அலகின் அமைப்பை உருவாக்கி அதனை செயற்படுத்தினோம். Rehabilitation centre) வைத்தியர், தாதிகளிற்கான அவசர மற்றும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளும் செயலமர்வுகளை ஒழுங்கு படுத்தி நடாத்தியது ( ATLS based training and disaster management drills)
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஆய்வுகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான அங்கிகரிக்கும் சபையை உருவாக்கி செயற்படுத்தினோம்.( ethical review committee).

விளையாட்டு மருத்துவம், மற்றும் என்புமுறிவு சத்திரசிகிச்சை பட்டப்பின்படிப்பு ஆய்வு வாரியம்( Board of study ) முறையே தலைவர், செயாலாளர் பதவி இலங்கை என்பு முறிவு வைத்திய சங்கத் தலைவர் ( President of Srilanka Orthopaedic Association) சர்வதேச சத்திரசிகிச்சை இலங்கை அத்தியாயத்தின் தலைவர் ( President International College of Surgeons- Srilankan Chapter) இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு உபாதைகள் தவிர்த்தல் சம்மந்தமான குழுவின் தலைவர் இலங்கை சுகாதார அமைச்சின் புனருத்தாரண அமைப்பின் ஆலோசகர்( Rehabilitation committee), விபத்து மற்றும் காயங்களின் தடுப்புக் குழு( Injury prevention committee) மருத்துவ உபகரண , மருந்துகள் கட்டுப்பாட்டு அலகின் என்பு முறிவு தொடர்பான ஆலோசனைக்குழு உறுப்பினர் Member of NMRA committee for orthopaedic devices போன்ற பதவிகளில் என்னால் முடிந்த வரை பணியாற்றியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>