ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இதுவரை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான ம.பிரதீபன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் 2ம் திகதி அன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்களே கட்டிப்பணத்தைச் செலுத்தியுள்ளனர் என்றார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>