யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் மட்டும் 2025 ஆண்டு சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!.

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் மட்டும் 2025 ஆண்டு சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் தகவல் உறுதிப்படுத்துகின்றது.

இலங்கை முழுவதும் வீதி விபத்து மரணம் அதிகரித்துள்ளது. இதில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீதி விபத்து மரணம் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஓர் விண்ணப்பத்திற்கு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் 2023 முதல் வீதி விபத்து மரணத்தின் எண்ணிக்கை அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமை 2023 ஆம் ஆண்டு வீதி விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 83 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு விபத்து மரண எண்ணிக்கை மேலும் அதிகரித்து 98 ஆக அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உறுதி செய்துள்ளது.

இதேநேரம் 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான ஐந்து ஆண்டு காலப் பகுதியில் விபத்துக்களில் அகப்பட்ட 9 ஆயிரத்து 325 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>