யாழ்ப்பாணம் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்துவைப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் 25ம்திகதி அன்றையதினம் வியாழக்கி;ழமை திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து, திண்மக் கழிவகற்றல் தொகுதியானது திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், பிரதம விருந்தினராக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தனும், சிறப்பு விருந்தினர்களாக பழைய மாணவர் ஜெ.ஜெயச்சந்திரனும், எழுக மூளாய் மறுமலர்ச்சி மையத்தின் பிரதிநிதி ப.புருசோத்தமனும் கலந்து சிறப்பித்துடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த திண்மக் கழிவகற்றல் தொகுதியை திறந்து வைப்பதற்கு எழுக மூளாய் மறுமலர்ச்சி மன்றம் நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>