ஒருவர் தனது காணியில் நிற்கும் பனை மரத்தை தறிப்பதானாலும் பனை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
வலி. வடக்கில. படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நிற்கும் பனை மரங்கள் அடியோடு இடித்து வீழ்த்தப்படுகின்றன.
இலங்கையில் ஒருவர் தனது காணியில் நிற்கும் பனை மரத்தை தறிப்பதானாலும் பனை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டிய கட்டாயம. இருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் எவரது அனுமதியும் இன்றி நில உரிமையாளரின் ஒப்புதலும் இன்றி பனைகளை அழிக்கின்றனர்
இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காது பனை அபிவிருத்திச் சபை உறக்கத்தில் உள்ளது என மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>