யாழ்ப்பாணம் வேலணையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்!

Share

தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரைதேசிய மக்கள் கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது.

6ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையெங்கும் நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலைவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுட்டுக் கொண்டிருந்த வேளை வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே தேசிய மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்த சம்பவத்தை வீடியோ செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே குறித்த தேசிய மக்கள் கட்சியின் குழு ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரால் ஊர்காவற்றுறை பொலிசில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>