யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு உள் நுழைய முயற்சித்த மீனவர்கள்!

Share

பு.கஜிந்தன்

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22-03-2024 தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டினை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொலிசார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் மீனவர்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கை விலங்கினை காட்டி மீனவர்களை அச்சுறுத்தும் விதத்தில் மிரட்டி வருகின்றனர்.

தொடர்ச்சியாக தமது வளங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி மீனவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>