யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்களைச் சந்தித்த கனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன்

Share

தற்போது இலங்கைக்கு ஊடகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளகனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்களைச் நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். அப்போது இலண்டன் எழுத்தாளரும் வானொலி துறை விற்பன்னருமான விமல் சொக்கநாதன் அவர்களும் உடனிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது கலை இலக்கியம் மற்றும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் செயற்பட்டுவரும் ஊடக கற்கை நெறிக்களுக்கான பிரிவு ஆகியவை தொடர்பாக இருவரும் உரையாடினார்கள்.

நாளை சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள விமல் சொக்கநாதன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் தலைமை ◌தாங்குகின்றார் என்பதும் அதில் கனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>