யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இருபத்தைந்து ஆலயங்களை சீரமைப்பதற்கான அரசாங்கத்தின் உதவியை வழங்கிய அமைச்சர் டக்ளஸ்

Share

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்கப்பட்டள்ளது.

தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான நிதியுதவியை பெற்றுத்தருமாறும் ஒருதொகுதி ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தரப்பினருக்கான காசோலைகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்து கலாசார திணைக்களத்தின் 2024 இற்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே குறித்த ஒரு தொகுதி ஆலயங்களுக்கு நிதியுதவியாக 15-06-2024 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதனடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 25 ஆலயங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>