யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழு அமைத்து அபோட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறும் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தகவல்

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழு ஒன்றை அமைத்து அதில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. மற்றும் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைக் குழு போன்றன ஒவ்வொரு ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

வைத்தியர் அரச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு மொத்தம் 27,855 வாக்குகளைப் பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுவும், சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை விட அவர் அதிக வாக்கெடுத்து வெற்றிபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

யாழ்ப்பாண தேர்தல் களத்தில் வைத்தியர் அர்ச்சுனா அதிக சர்சைக்குள்ளாகிய ஒரு வேட்பாளர். என்பதும் வடக்கு வைத்தியர்கள் செய்யும் ஊழல் மற்றும் மோசடிகளை துணிச்சலாக வெளிக்கொண்டு வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

பல்வேறு அரசியல்வாதிகளினாலும், அதிகம் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருந்த வைத்திய அர்ச்சனா அவர்களை யாழ்ப்பாண மாவட்டட மக்கள் குறிப்பிட்ட அளவு வாக்குகளினால் வெற்றியடையப் செய்திருப்பதும் இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அங்கு தோற்கடிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>