யாழ்ப்பாண. மாவட்டத்தில் நெல்லில் இலை மடிச்சுக்கட்டி நோய் தாக்கம்

Share

போதனாசிரியர்களின் ஆலோசனைகளை பெற அறிவுறுத்தல்!

யாழ்ப்பாண. மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில் விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுமாறு வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது மழை பெய்த பின் காற்றோடு சேர்ந்து குளிருடனான காலநிலை அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வயல் நிலங்களில் குறித்த நோய் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளிலும் நோய் தாக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் நிலவுகிறது.

ஆகவே விவசாயிகள் குறித்த நோய் தாக்கத்தை ஆரம்பத்தில் கட்டுப்படுத்துவதற்கு அருகில் உள்ள விவசாய போதனாசிரியர்களை அணுகி அவர்களின் ஆலோசனையை பெற்று கிருமிநாசினிகளை விசுறுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>